பற்றாக்குறை நோய்கள் நாம் உண்ணும் உணவில் இந்த வைட்டமின்கள் போதிய அளவில் இல்லாவிட்டால், உயிரையே பறிக்கக் கூடிய நோய்கள் ஏற்படுகின்றன.
வரையறை – vitamins in tamil
- வைட்டமின்கள் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. இவற்றின் காரணமாக வைட்டமின்கள் பற்றிய தெளிவான வரையறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:-
- வைட்டமின்கள் கரிம சேர்க்கைப் பொருள்களை பஸ்ன் பகுதிப் பொருளாகக் கொண்டவை.
உடலின் இயல்பான வளர்ச்சிக்கும் முறையான பராமரிப்புக்கும் இவை தேவை. - வைட்டமின்கள் மிகக் குறைந்த அளவில்தான் தேவைப் படுகின்றன.
- வைட்டமின்கள் உடல் இயங்குவதற்குத் தேவையான சக்தியை வழங்குவதில்லை.
- உடல் கட்டுமானத்தின் போது வைட்டமின்கள் கட்டுமானப் பொருளாகப் பயன்படுவதில்லை.
- நாம் உண்ணும் உணவிலிருந்து சக்தியை உருவாக்கவும், வளர்சிதை மாற்றங்களை ஒழுங்குபடுத்தவும் வைட்ட மின்கள் தேவைப்படுகின்றன.
- கிரியா ஊக்கி போல. இரசாயன மாற்றத்திற்கு வைட்டமின்கள் ஆட்படுவதில்லை. ஆனால் சில நொதிப் பொருள்கள் என்சைம் வகையாகா ஊக்குவிக்கின்றன.
- இவை குறிப்பிட்ட அளவு வெப்ப நிலைகளுக்குள் மட்டுமே செயல்படுகின்றன. அதே போல, குறிப்பிட்ட கார அமில அளவுகளுக்குள் மட்டுமே செயல்படுகின்றன.
சொல் பற்றிய விளக்கம் – vitamins in tamil
வைட்டமின் என்ற சொல் ‘ வைட்ட’ என்னும் இலத்தின் மொழிச் சொல்லின் அடியொற்றிப் பிறந்தது. ‘வைட்ட’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லுக்கு ‘உயிர்’ என்று பொருள்.
‘அமின்’ என்ற சொல் அம்மோனியாவிலிருந்து தயாரிக்கப் பட்ட பொருள் என்பதை உணர்த்துகிறது.
எனவே, வைட்ட மின் (Vitamino) என்பது அம்மோனியாவிலிருந்து தயாரிக்கப் பட்ட உயிர் போன்ற முக்கியமான பொருளாகும். வைட்டமின் என்ற பெயரைச் சூட்டியவர் ஃபங்க (Funk) என்னும் விஞ்ஞானியாவார். அவர் பெயர் சூட்டிய ஆண்டு 1912
பெயர் குறுக்கப்பட்டது.
1912-ஆம் ஆண்டிற்குப் பின் புதுப்புது வைட்டமின்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் தன்மை, பண்புகள் ஆகியவை குறித்து அலசி ஆராயப்பட்டன. அம்மோனியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட உபபொருள்கள் எல்லா வைட்டமின்களிலும் இல்லை என்று அந்த ஆராய்ச்சிகளில் தெரியவந்தது.
எனவே. அமின் (Amine) என்ற பிரிவில் உள்ள ‘E’ என்னும் எழுத்து கைவிடப்பட்டது.
அது முதல் Vitamine’ என்ற பெயர் Vitamin என்று குறுக்கப்பட்டது. 1912-ஆம் ஆண்டு வைட்டமின் என்ற பெயர் சூட்டப் பட்ட போதிலும், அதற்கு முன்னரே வைட்டமின்களைப் பற்றி விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர்.
ஊட்டச் சத்துக் குறைவினால் தவிட்டான் எனப்படும் பெரி – பெரி (Borlbori) நோய் உண்டாகிறது. பாட்டம் குறைலினால் சொறி, கரப்பான், பல் ஈறு வீக்க நோய் ஏற்படுகிறது.
உணவில் சில குறிப்பிட்ட பொருள்கள் இல்லாததால் இந்த நோய்கள் ஏற்படுகின்றன என்று விஞ்ஞானிகள் தெளிவாகத் தெரிவித்தனர்.
உயிர்ப் பொருள்
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த நுண்ணுயிரியல் நிபுணரான வில்டர்ஸ் (Wildors) என்பவர் ஈஸ்ட் (Yeast) தொடர்பாகச் சில சுவையான விவரங்களை வெளியிட்டார்.
சில எஸ்ட் இனங்கள் வளர்ந்து பெருக உயிருள்ள ஈஸ்ட் செல்களில் உள்ள “ஒரு பொருள்” தேவை என்று அவர் கூறினார். அந்தப் பொருள் இல்லாவிடில் ஈஸ்ட் வளர்ச்சி தாமதப்படுவதையும் அவர் நிரூபித்தார்.
ஈஸ்ட் வளர்ச்சிக்குத் தேவையான அந்தப் பொருளுக்கு அவர் ‘பயாஸ்’ (Bios) – உயிர்ப் பொருள் என்று பெயரிட்டார். வில்டர்ஸ் குறிப்பிட்ட பயாஸ் என்கிற உயிர்ப் பொருள் ஒரு தனிப் பொருள் அல்ல என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது.
உண்மையில் இன்று ‘பி’ வைட்டமின் (Vitamin – B) தொகுதி என்று அழைக்கப்படுவதைத் தான் அன்று வில்டர்ஸ் ‘பயாஸ்’ என்ற பெயரிட்டு அழைத்தார்.
புதிய வைட்டமின்கள்
தேவையான அளவு கார்போ ஹைடிரேட் (Carbo Hydrate – மாவுச் சத்து வகை), புரோட்டீன் (Protein – புரதப் பொருள்), கொழுப்பு முதலிய உணவுச் சத்துக்கள் வழங்கப்பட்டபோதிலும், எலிகள் உயிர் வாழாமல் இறந்து போகின்றன என்று சோதனைகள் மூலம் அவர் எடுத்துக் காட்டினார்.
இதற்கு ஆறு ஆண்டுகள் கழித்து ஹர்ப்கின்ஸ் மற்றொரு கட்டுரை எழுதினார்.
அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து ஃபங்க் என்பவரின் ஆய்வுக் கட்டுரை வெளியானது.
பல வைட்டமின்கள் பிரித்தெடுக்கப்பட்டு, அவற்றின் குணம், அமைப்பு முதலியன தெளிவாக்கப்பட்டுள்ளன.
அதே சமயத்தில் இந்தப் பற்றாக்குறை நோய்களைப் போக்குவதற்குத் தேவையான வைட்டமின்கள் தயாரிக்கும் பணியிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.