வெண்டைக்காய் பயன்கள் | Vendakkai Benefits In Tamil

Vendakkai benefits in tamil வெண்டைக்காய் பயன்கள் வெண்டைக்காய் சிறந்த சத்துள்ள காய். இதில் மருத்துவ குணம் ஏராளமாக உள்ளது. இதனை சமையல் செய்தும் சாப்பிடலாம், பச்சையாகவும் உண்ணலாம். இதில் மூளைக்கு வலுவூட்டும் சத்துகள் அபரிமிதமாக உள்ளமையால் நல்ல ஞாபக சக்தியை அளிக்கக் கூடியது. மூளை வளர்ச்சி அடையும்.

Vendakkai benefits in tamil – வெண்டைக்காய் பயன்கள்

வெண்டைக் காயைப் பருப்பு சாம்பாரில் அல்லது குழம்பில் போட்டு உணவுக்குப் பயன்படுத்துவர். வெண்டைக்காய் வருவல், வெண்டைக்காய் பச்சடி செய்தும் சாப்பிடுவார்கள். இதனைக் கஷாயம் செய்து குடித்தால் இரத்தக் கொதிப்பு அகன்றுவிடும்.

சிலர் மூளை நரம்புகளில் வலி எரிச்சல் என்று கஷ்டப்படுவார்கள். இவர்கள் வெண்டைக்காய் ஜூஸ் தயாரித்து தினசரி காலை வெறும் வயிற்றில் 30 நாட்கள் சாப்பிட்டால் இந்நோய் குணமாகும்.

வெண்டைக்காயை உணவுடன் அடிக்கடி சேர்த்துக் கொள்வதின் மூலம் மூளைச் சூடு, உடல்சூடு ஆகியவற்றைத் தணிப்பதுடன் மலச்சிக்கலையும் அகற்றுகின்றது.

இது வழவழவென்று இருக்கிதென்று ஒதுக்கிவிடாமல் உணவுடன் சேர்த்துக் கொள்வதின் மூலம் இது போன்ற நோய்கள் நம்மை அணுகாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *