திரிபலா சூரணம் பயன்கள் | Triphala Suranam Benifits In Tamil

Triphala Suranam Benifits In Tamil : திரிபலா சூரணம் பயன்கள் திரிபலா சூரணம் தீமைகள் பார்க்கலாம். திரிபலா சூரணம் என்பது கடவுள் மனிதனுக்கு கொடுத்த ஒரு அற்புதமான மூலிகை என்றே சொல்லலாம்.

இது இளமையாக இருக்கவும், நோய் எதிர்ப்பு சத்தியே அதிகரிக்கவும் போன்ற பல்வேறு நோய்களுக்கு ஒரே மருந்தாக இது உதவுவதால் இதை நாம் அமிர்தம் என்றே சொல்லலாம். இந்த திரிபலாவில் என்ன இருக்கிறது என்று கேட்டால் இதில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இந்த மூன்றும் சேர்ந்ததே திரிபலா ஆகும்.

திரிபலா சூரணம் பயன்கள் – Triphala Suranam Benefits In Tamil

 • திரிபலா சூரணத்தில் நிறைய ஆன்டி ஆசிட் இருப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியே அதிகரிக்கிறது.
 • நமது முதுமையை தள்ளி போட உதவுகிறது.
 • இது இதய நோய் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் வராமல் தடுக்கிறது மற்றும் இதயத்தை பராமரிக்கிறது.
 • புற்று நோய் வராமல் தடுக்கிறது.
 • மனிதனின் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.
 • சுகர் உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சுகர் அளவு சீராக இருக்கும்.
 • இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது மற்றும் அஜீரண கோளாறுகளையும் சரி செய்கிறது.
 • இது குடற்புழுக்கள் வராமல் தடுக்கும்.
 • நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து புதிய ரத்தம் வர இந்த மருந்து அற்புதமாக செயல்படும் என்றே சொல்லலாம்.
 • தோல் நோய், சுவாசப் பிரச்சனை, மூச்சிக் குழாயில் சளி போன்ற பிரச்சனைகள்
  இருப்பவர்கள் இந்த திரிபலா சூரணம் சாப்பிட்டு வந்தால் சரி ஆகும்.
 • இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
 • கல்லீரல் செயல்பாட்டை சீராக செயல்ப்படுத்தவும், பாதுகாக்கவும் திரிபலா சூரணம் உதவுகிறது.
 • அல்சர் உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.
 • திரிபலா சூரணம் ஆண்மை அதிகரிக்க தினமும் இரவில் பானக்கற்கண்டுடன் திரிபலா சூரணம் பொடி சேர்த்து சாப்பிடவும். சாப்பிட்ட பின் பசும் பால் குடித்து வந்தால் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.
 • திரிபலா சூரணம் உடல் எடை குறைக்க இது சிறந்த மருந்தாக அமைகிறது.

திரிபலா சூரணம் தீமைகள் 

திரிபலா சூரணம் பல நன்மைகளை தந்தாலும் திரிபலா சூரணம் பக்க விளைவுகள் தருகிறது. என்ன என்ன தீமைகள் என்று பார்க்கலாம்.

வயிற்றுப்போக்கு

திரிபலா சூரணம் அளவோடு எடுத்து வந்தால் நன்மை ஏற்படும். அதுவே அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு எரிச்சல் உண்டாகலாம்.

திரிபலா சூரணம் சாப்பிடும் முறை 

 • திரிபலா சூரணத்தை மழைக் காலங்களில் வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
 • கோடைக்காலங்களில் சாதாரண நீரில் கலந்து குடிக்கலாம்.
 • நீரில் கலந்து குடிக்க பிடிக்காதவர்கள் தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிடலாம். தினமும் இரவில் ஒருதேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் முழு பலன் கிடைக்கும்.

திரிபலா சூரணம் செய்முறை

 • திரிபலா சூரணம் செய்வது எப்படி என பார்க்கலாம்.
 • கடுக்காய், தான்றிக்காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நெல்லிக்காய் சாதாரணமாக அருகில் உள்ள பழக்கடைகளில் கூட கிடைக்கும்.
 • திரிபலா சூரணத்தை வீட்டில் தயாரிக்கும் முறைப்பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.
 • நெல்லிக்காய் – 4 பங்கு, தான்றிக்காய் – 2 பங்கு, கடுக்காய் – 1 பங்கு அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • அடுத்ததாக நெல்லிக்காய் மற்றும் கடுக்காயின் விதையை நீக்க வேண்டும்.
 • இந்த மூன்றையும் நிழலில் காயவைக்கவும்.
 • காய வைத்தபின் இந்த மூன்றையும் சேர்த்து அரைத்து பொடியாக்கவும்.

திரிபலா சூரணம் எங்கு கிடைக்கும்

 • திரிபலா சூரணம் பொதுவாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
 • பெரும்பாலும் கடைகளில் வாங்கும் திரிபலா சூரணத்தின் தரம் நமக்கு தெரியாது ஒரு வியாபார நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டவையாக இருக்கலாம்.
 • இதனால் முழு பயன் நமக்கு கிடைக்காமல் போகலாம்.
 • ஆகவே நமது வீட்டில் செய்து பயன்படுத்துவதே சிறந்தது என பரிந்துரை செய்யப்படுகிறது.

திரிபலா சூரணம் யார் சாப்பிட கூடாது

கர்ப்பிணி பெண்கள்

 • திரிபலா சூரணத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ள கூடாது. மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் பெண்களும் எடுத்துக் கொள்ள கூடாது.

குழந்தைகள் 

 • திரிபலா சூரணம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என எந்த சான்றுகளும் இல்லை என்பதால் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
 • குழந்தைகளுக்கு கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் கொடுப்பதற்கு முன் ஒருமுறை சித்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொடுக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

பெரியவர்கள்

 • பெரியவர்கள் திரிபலா சூரணத்தை எடுப்பதற்கு முன் ஏதேனும் நோய்களுக்கு ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொண்டு இருந்தால் ஒரு முறை சித்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின் பயன்படுத்தலாம் thiripala suranam benefits in tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *