10 ம் வகுப்பு படித்திருந்தால் போதும் தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3359 காலிபணியிடங்கள் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் – tnusrb recruitment 2023

10 ம் வகுப்பு படித்திருந்தால் போதும் தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3359 காலிபணியிடங்கள் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்… tnusrb recruitment 2023

TNUSRB RECRUITMENT 2023 – இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட 3,359 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்ஆக. 18 – செப்.17 வரை இணைய வழியில் தேர்வுக்கு ஆண் மற்றும் பெண் விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து வெளியான அறிவிப்பில்:-

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை-08.

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்களுக்கான அறிவிக்கை எண் – 02/2023.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023-க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்களை (Online Application) வரவேற்கிறது.RTNUSB Recruitment 2023 ஊதிய விகிதம் ரூ.18,200 – 67,100.

அறிவிக்கை தேதி:- 08.08.2023

இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி 18.08.2023

இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 17.09.2023

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்

மொத்த காலிப்பணியிடங்கள்: 3,359

இரண்டாம் நிலைக் காவலர் மாவட்ட மாநகர ஆயுதப்படையில் 780 காலியிடம்,TNUSRB Recruitment 2023

இரண்டாம் நிலைக் காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 1,819 காலியிடம்

சிறை மற்றும் சீர்திருத்தத் துறை இரண்டாம் நிலை சிறைக் காவலர் 86 காலியிடம்

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தீயணைப்பாளர் 674 காலியிடம்

ஒதுக்கீடுகள்:-

மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுபோட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு 10% சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கு 10%, முன்னாள் இராணுவத்தினருக்கு 5% மற்றும்

ஆதரவற்ற விதவைகளுக்கு 3% ஒதுக்கப்படும்.

வகுப்பு வாரி இட ஒதுக்கீடு:-

தற்போதுள்ள அரசு விதிகளின் படி வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

கல்வித் தகுதி :-

விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியினைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர்,TNUSRB Recruitment 2023

வயது வரம்பு:-

பொது விண்ணப்பதாரர்கள் 01.07.2023 அன்று 18 வயது நிறைவு பெற்றவராகவும் மற்றும் 26 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வயது உச்சவரம்பு தளர்வு கீழ்க்கண்டவாறு பின்பற்றப்படும்.

i. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர் BC(M) } ! மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC | DNC) 31 வயது

ii. ஆதிதிராவிடர் (SC) / ஆதிதிராவிடர் (அருந்ததியர் SC{A} } / பழங்குடியினர் (ST) மூன்றாம் பாலினத்தவர் 37 வயது

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான முன்னுரிமை (PSTM)

முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு பயின்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் மொத்த காலிப் பணியிடங்களில் 20% முன்னுரிமை அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு மையம் :-

எழுத்துத் தேர்வு மைய விவரம் தேர்வுக்கூட சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் எழுத்துத் தேர்வுக்கான மையங்களின் எண்ணிக்கையை கூட்டவும், குறைக்கவும் அல்லது விண்ணப்பதாரரை ஒரு மையத்திலிருந்து வேறொரு மையத்திற்கு நிர்வாக காரணத்திற்காக மாற்றவும் இவ்வாரியத்திற்கு உரிமை உண்டு. விண்ணப்பதாரர் தேர்வுகூட சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.TNUSRB Recruitment 2023

தேர்வுக் கட்டணம் :-

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.250/- இணையதள வழி (இணையதள வங்கி / வங்கி கடன் அட்டை வங்கி பற்று அட்டை / UPI ) மற்றும் இணையமில்லா வழியில் SBI வங்கியின் செலுத்துச் சீட்டு மூலம் SBI வங்கியின் அனைத்து கிளைகளிலும் அலுவல் நேரத்தில் செலுத்தலாம்.

தகவல் சிற்றேடு :-

இத்தேர்விற்கான கூடுதல் தகவல்கள், எழுத்துத் தேர்விற்கான தேர்வு நிலைகள் மற்றும் தேர்வு முறைகள், ஆகியவை தகவல் சிற்றேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் இவ்வாரிய இணையதளமான www.tnusrb.tn.gov.in-ல் இருந்து தகவல் சிற்றேட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கு முன்னர், இவ்வாரிய இணையதளத்திலுள்ள தகவல் சிற்றேட்டினை படித்து அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்

பணி:-

காவல்துறை,

சிறை மற்றும் சீர்திருத்ததுறை ,

தீயனைப்பு துறை

கல்விதகுதி:-

10 ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:-

01.07.2023 அன்று, அனைத்து விண்ணப்பதாரர்களும், குறைந்தபட்சம் 18 வயது நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். அதிக பட்சம் 26 வயதிற்க்குள் இருக்கவேண்டும்

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் எனில் அதிகபட்சம் 28 வயதிற்கு மேற்படாதவராகவும்,

எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் எனில் 31 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

மூன்றாம் பாலினத்தவர் 31 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

ஆதரவற்ற விதவைகள் பிரிவில் 37 வயதிற்கு மேற்படாதவராகவும்,TNUSRB Recruitment 2023

முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 47 வயதிற்கு மேற்படாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க:-

https://www.tnusrb.tn.gov.in/

தேர்வுக்கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.250/- தேர்வுக் கட்டணத்தை இணையவழியிலோ, இணையமில்லா வழியில் எஸ்.பி.ஐ வங்கியின் செலுத்துச்சீட்டு மூலம் செலுத்தலாம்.

கடைசி நாள்:-

17.09.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://www.tnusrb.tn.gov.in/pdfs/NotificationCR2023.pdf

இத் தேர்வுக்கு இந்த இணையத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கூடுதல் தகவல்கள் / விவரங்கள் மற்றும் இணையவழி (Online Application) சமர்ப்பிப்பதற்கு இவ்வாரியத்தின் விண்ணப்பம் இணையதளமான https://www.tnusrb.tn.gov.in/ பார்வையிடவும்.

Read Also >>

தமிழக அஞ்சல் துறையில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் Indian Post Office GDS Recruitment 2023

 

tnusrb recruitment 2023

Leave a Comment