Tecno Pova 5 & Tecno Pova 5 pro Price in India
சமீபத்தில் இந்தோனேசியாவில் Tecno Pova 5 போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த புதிய போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது தற்போது வந்த அறிவிப்பின்படி, டெக்னோ போவா 5 மற்றும் டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறிப்பாக இந்த போன்கள் ஆர்க் இன்டர்பேஸ் பேக் லைட்ஸ் டிசைனை கொண்டு வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் நத்திங் போன் ரூ.40,000 விலையில் கிடைக்கிறது. தற்போது நத்திங் மொபைல் போன்றே டிசைன் கொண்ட டெக்னோ போவா 5 போன்கள் ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் என்பதால் கண்டிப்பாக இந்த போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். இந்த இரண்டு போன்களின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
டெக்னோ போவா 5 ப்ரோ Tecno Pova 5 & Tecno Pova 5 pro அம்சங்கள்: 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 580 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டு வெளிவரும் இந்த போன். குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த போன் இந்தியாவுக்கு வரும்.
ஆக்டோ-கோர் மீடியாடெக் 6080 6என்எம் பிராசஸர் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) வசதி இதில் உள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி இதில் இருப்பதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் 3.5எம்எம் ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5000 எம்ஏஎச் பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போன் அறிமுகமாகும்.
50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 5 ப்ரோ போன்.Tecno Pova 5 & Tecno pova 5 pro மேலும் 16எம்பி செல்பி கேமரா, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.1, ஜபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும்.
Read Also
ஆனால் டெக்னோ போவா 5 போனில் 5ஜி ஆதரவு இல்லை. அதாவது இந்த போன் 4ஜி வோல்ட்இ வசதியுடன் வெளிவரும். பின்பு வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா 5 ஸ்மார்ட்போன்.
குறிப்பாக டெக்னோ போவா 5 மற்றும் டெக்னோ போவா 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும். மேலும் இந்த இரண்டு போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகாகும். எனவே இந்த போன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.