red banana benefits during pregnancy in tamil
வாழைப்பழங்களில் மிக முக்கியமானது செவ்வாழை பழம் தான். இதனை சந்தான விருத்தி என்று கூட அழைப்பார்கள்.
பொதுவாக கர்ப்பகாலத்தில் முதல் மூன்று மாதங்களில் பசி உணர்வு , குமட்டல் வாந்தி போன்ற சில பிரச்சினைகள் வரக்கூடும். இதனால் சாப்பிட்டதும் வாந்தி ஏற்பட்டு உடல் சோர்வு ஏற்படும் அடுத்த மாதத்தில் இருந்து பசியின் மீது நாட்டம் ஏற்படும்.
அடிக்கடி பசி உணர்வு ஏற்படும். இந்த காலத்தில் எடுத்துக்கொள்ளும் உணவு கருவின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் சத்தான உணவுகளை மேற்கொள்வது நல்லது. அந்த நேரத்தில் செவ்வாழை பழத்தை சாப்பிடுவதன் மூலம் பசி உணர்வை தவிர்த்து நல்ல ஊட்டத்தை தரக்கூடிய மருந்தாக மாறுகிறது.
பிரசவ காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் உற்ற நண்பனாக இருக்கிறது .வளரும் சிசுவிற்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கிறது. வாங்க அதை பற்றி நாம் பார்க்கலாம்.
செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி வரக்கூடிய பசி உணர்வை சரிசெய்து அவர்களுக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கிறது.
- செவ்வாழை பழத்தில் அதிக அளவு கால்சியம் சத்து அதிக அளவு காணப்படுகிறது. கர்ப்ப காலத்தில் சிசுவிற்கு அதிக கால்சியம் சத்து தேவைப்படும்.
- அப்பொழுது தாயின் உடலின் எலும்புகளில் இருந்து போதுமான சத்துக்களை உறிஞ்சுகிறது, அந்த சத்துக்களை செவ்வாழை பழம் சாப்பிடுவதால் அதிக அளவு கிடைக்கிறது.
- செவ்வாழை பழம் எடுத்துக்கொள்ளும்போது அது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
- செவ்வாழை பழம் சாப்பிடுவதால் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய மலச்சிக்கலை அது தடுக்கிறது.
- கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய இரத்த சோகைக்கு செவ்வாழை பழம் ஒரு தீர்வாக அமைகிறது.
- செவ்வாழை பழத்தில் இரும்பு சத்து அதிக அளவு காணப்படுவதால் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய இரத்த சோகையை சரிசெய்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது
- கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த செவ்வாழை பழம் உதவுகிறது, செவ்வாழை பழத்தில் பொட்டாசியம் காணப்படுவதால் அவை இரத்தத்தில் சோடியம் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
- கர்ப்ப காலத்தில் வரக்கூடிய சர்க்கரை பிரச்சினையை சரி செய்யும் அருமருந்தாக செவ்வாழை பழம் விளங்குகிறது.
- முக்கியமாக குழந்தை பேறு இல்லாதவர்கள் செவ்வாழை பழத்தை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப்பை வலுப்பெற்று குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.
- ஆண்களுக்கு வரக்கூடிய விந்தணு பிரச்சினையை சரிசெய்து அவர்களுக்கு வலுவை கொடுக்கிறது.
செவ்வாழை எப்போது சாப்பிட வேண்டும்
முந்தைய காலத்தில் உணவுக்கு முன்பு இனிப்பு வழங்குவது வழக்கமான ஒன்றாக இருந்தது. தலைவாழை விருந்தில் முதலில் வைப்பது இனிப்புகளே,
அதில் பழம் வைப்பது அந்த காலத்தில் பெரியவர்கள் ஒரு சம்பூர்தாயமாக வைத்திருந்தனர்.அந்த வகையில் செவ்வாழை பழத்தை உணவுக்கு முன்பு எடுத்து கொள்ளவது நல்லது பின்பு சிறிது நேரம் கழித்து உணவை எடுக்க வேண்டும்.
பெரும்பாலும் இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு செவ்வாழை பழத்தை சாப்பிடவேண்டும். கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே இப்பழத்தை சாப்பிடுவது நல்லது.
செவ்வாழை பழம் தீமைகள்
செவ்வாழை பழத்தை சிறுவயது குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது, ஏன்னெனில் அவர்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
ஆதலால் சிறுவயது குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதை தவிர்க்கவும்.மேலும் சர்க்கரை நோயாளிகள் செவ்வாழை பழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மேலும் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களும் இதை மருத்துவரின் ஆலோசனை படி சாப்பிடவேண்டும்.