மொச்சை கொட்டை பயன்கள் mochakottai benefits in tamil மொச்சைக்காயைச் சாம்பாரில் அல்லது குழம்பில் போட்டு அதனைச் சாதத்திற்குப் பயன்படுத்துவார்கள். நடைமுறையில் மொச்சைக் கொட்டை என்று கூறுவார்கள். மொச்சைக் காயை வேக வைத்து சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதில் வைட்டமின் ஈ – இருக்கிறது.
மொச்சை கொட்டை பயன்கள் – Mochakottai benefits in tamil
வைட்டமின் ஈ- குறைபாடு உடையவர்கள் இந்தக் காயை அடிக்கடி சாப்பிடவும். மொச்சைக் காயைப் பச்சையாக உள்ள போது சமைத்துச் சாப்பிட்டால் அதன் பலனை முழுமையாகப் பெறலாம்.
காய்ந்த மொச்சையை ஊறவைத்து அதன்மேல் தோலை நீக்கிவிட்டு, அதனை வெயிலில் காய வைத்து அந்தப் பருப்பை எண்ணெயில் போட்டு பொரித்து காரம், உப்பு கலந்து சாப்பிடலாம்.
ஊரல் வியாதி உள்ளவர்கள், தோல் சம்பந்தமான வேறு வியாதி உள்ளவர்கள் மொச்சைக்காயை உணவில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அப்படிப் பயன்படுத்தினால் தோல் சம்பந்தமான வியாதி மேலும் தீவிரமாகும்.