லியோ முடிவடைந்த கையோடு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ள Lokesh Kanagaraj – என்ன கார்? எவ்வளவு ரேட் தெரியுமா?

Lokesh Kanagaraj லியோ முடிவடைந்த கையோடு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ள லோகேஷ் கனகராஜ் – என்ன கார்? எவ்வளவு ரேட் தெரியுமா?

Lokesh Kanagaraj Buy a New Car

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான Lokesh Kanagaraj கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான “மாநகரம்” படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தான் இயக்கிய முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்த Lokesh Kanagaraj அதன் பின்னர் மன்சூர் அலிகானுக்காக தயார் செய்த “கைதி” படத்தை கார்த்தியை வைத்து இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார். கைதி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியானது அவரை பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்த்தது.

அதன் பின்னர் தனது மூன்றாவது படத்திலேயே விஜயை வைத்து இயக்கிய அவர் “மாஸ்டர்” படத்தின் வெற்றியை தொடர்ந்து அதிகமாக வரவேற்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாறினார். பின்னர் உலக நாயகன் கமலஹாசனை வைத்து “விக்ரம்” என்கிற படத்தினை இயக்கிய அவர் இந்திய அளவில் பேசப்படும் ஒரு இயக்குனராகவும் மாறினார்.

Lokesh kanagaraj Buy a New car

அதோடு கமலஹாசனின் சினிமா பயணத்தில் “விக்ரம்” படம் அவருக்கு ஒரு மாபெரும் இலாபத்தை அப்போது வழங்கியது. அதுமட்டுமின்றி வசூலிலும் பெரிய சாதனை நிகழ்த்திய விக்ரம் படம் லோகேஷின் மார்க்கெட்டையும் வேறு கட்டத்திற்கு உயர்த்தியது. இந்நிலையில் தற்போது தனது ஐந்தாவது திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள Lokesh Kanagaraj அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

அந்த வகையில் விஜய்யை வைத்து அவர் இயக்கியுள்ள “லியோ” படமானது அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என பல்வேறு முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளதால் இந்த படமும் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது “லியோ” படம் முடிவடைந்த கையோடு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிய பி.எம்.டபிள்யூ கார் ஒன்றினை வாங்கியுள்ளார். இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் தற்போது வாங்கியுள்ள பி.எம்.டபிள்யூ காரானது 7 சீரியஸ் வகையைச் சேர்ந்ததாகவும், இந்த மாடலின் விலை இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விக்ரம் படம் வெற்றி அடைந்த கையோடு கமல் அவருக்கு லெக்சஸ் எனும் விலையுயர்ந்த சொகுசு காரை பரிசளித்திருந்த வேளையில் தற்போது அதைவிட பெரிய சொகுசு காரை Lokesh Kanagaraj வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Lokesh kanagaraj Buy a New car

Leave a Comment