குதிரைவாலி அரிசியின் மருத்துவ குணங்கள் | Kuthiraivali Rice Benefits In Tamil

kuthiraivali rice benefits in tamil – குதிரைவாலி அரிசியின் மருத்துவ குணங்கள்

kuthiraivali rice benefits in tamil ‘’இயற்கை உணவே மருந்து’’  வணக்கம் நண்பர்களே குதிரைவாலி அரிசியின் நன்மைகள்  பற்றி நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம். குதிரைவாலி அரிசி பெயரே ரொம்ப வித்யாசமா இருக்குல்ல ஆமாங்க இந்த காலத்து மக்கள் இந்த அரிசியை சாப்டிருக்கவே மாட்டாங்க.ஆனால் இதுல இருக்குற சத்துக்கள் ஏராளம்.என்ன என்ன சத்துக்கள் இருக்கு அப்டிங்கிறத நாம இப்போ பார்க்கலாம்.

குதிரைவாலி அரிசியின் வரலாறு- kuthiraivali rice benefits in tamil

இந்த அரிசி புற்கள் வகையை சார்ந்தது.இதை புல்லு சாமை அப்படின்னு சொல்லுவாங்க. இதை  ஆங்கிலத்தில் ஹாஸ்டய்டு மில்லட் அப்படினும் சொல்லுவாங்க.. இந்த குதிரைவாலி அரிசி நெல் பயிர்கள் இல்லாத இடத்தில் வளரக்கூடியது.

கோதுமையை விட ஆறு மடங்கு நார் சத்துக்கள்  உள்ளன. இது பச்சயம் இல்லாத சிறு தானியம் ஆகும்.

 சத்துக்கள் :

 • கால்சியம்
 • நார்ச்சத்துக்கள
 • கொழுப்புசத்துக்கள்
 • இரும்புச்சத்துக்கள்
 • மெக்னீசியம்
 • காப்பர்
 • புரதம்
 • கார்போஹைட்ரேட்
 • பி கரோட்டின்
 • தயமின்
 • ரிபோஃபிளேவின்
 • வைட்டமின் ஏ
 • வைட்டமின் பி
 • வைட்டமின் சி
 • வைட்டமின் கே

போன்ற சத்துக்கள் உள்ளன.

குதிரைவாலி அரிசியின் உணவுகள்- kuthiraivali rice benefits in tamil

 1. இட்லி,
 2. தோசை,
 3. உப்புமா,
 4. கூழ்,
 5. முறுக்கு,
 6. சாதம் ,
 7. இனிப்பு பொங்கல்,  மற்றும் இனிப்பு வகைகள் என விதவிதமாக செய்யலாம்.

குதிரைவாலி அரிசி சாப்பிடும் முறை:

இந்த அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து அதன் பிறகு சேமிக்க வேண்டும். தினமும் இதை எடுத்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் வாரத்திற்கு மூன்று, நான்கு  முறை எடுத்து கொள்ளலாம்.

க்ளூட்டன் பிரச்சனை இருப்பவரும் குதிரைவாலி அரிசியை எடுத்து கொள்ளலாம். வளரும் குழந்தைகள் அவர்களின் உடல் எடை, உயரம் பொறுத்து குதிரைவாலி அரிசியை சேர்க்கலாம்.

செரிமான பிரச்சனை நீங்க :

 • சிலர்க்கு அடிக்கடி செரிமான பிரச்சனை இருக்கும்.
 • அதிக அளவில் அவஸ்தை படுவாங்க.இதற்கு ஒரே தீர்வு குதிரைவாலி அரிசியினால் செய்த உணவினை எடுத்துக்கொண்டால் இந்த அவஸ்தையினில் இருந்து விடுபடலாம்
 •  இதில் இருக்கும் ஸ்டார்ச் ரெஸிஸ்டெண்ட் செரிமானத்திற்கு நல்லது
 • வயதானவர்களுக்கு ரொம்பவே நல்லது.வளரும் குழந்தைகளின் தேவைக்கேற்ப ஊட்டச்சத்துக்களும் உள்ளன
 •  உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட் வேலை செய்கிறது. ஓடி விளையாடக்கூடிய குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.

 மலச்சிக்கல் கோளாறு நீங்க:

 •  மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவங்க தினமும் இந்த குதிரைவாலி அரிசி சாதத்தை சாப்பிட்டால் ஒரே நொடியில் காணாமல் போய்விடும் அந்த அளவுக்கு இதில் சத்துக்கள் உள்ளன.
 • குதிரைவாலியில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் மிக அதிகமாக உள்ளன. இந்த நார்ச்சத்துக்கள் உடலில் செரிமானம் ஆகாமல் முழுவதுமாக அப்படியே வெளியேற்றப்படுகிறது
 •  எனவே குதிரைவாலி அரிசி உண்பதால் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க :

சிலருக்கு எப்போதுமே காய்ச்சல் சளி இருமல் சின்ன சின்ன இயற்க்கை மாறுதலுக்கும் உடம்பில் நோய் உண்டாகும்

 • இது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதினால் தான்.இதற்கு ஒரே தீர்வு குதிரைவாலி அரிசி .இதனை சமைத்து சாப்பிடும் போது நமது உடலுக்கு புது புத்துணர்வு கிடைக்கும்

நீரழிவு நோய் நீங்க :

 •    இப்போ உள்ள காலக்கட்டத்தில் சர்க்கரை நோய் இல்லாதவர்களே இல்லை அந்த அளவுக்கு சிறுவயதில் இருந்து பெரியவர்கள் வரை இந்த நோய் அனைவரையும் தாக்குகிறது.
 •  குதிரைவாலி அரிசியில் கார்போஹைட்ரெட் வேகமாக செரிமானம் பண்ணுவதை தடுக்கிறது. இதனால் உடலில் குளுக்கோஸ் அதிகரிக்கப்படுவதால் நீரழிவு நோய், இதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக இருக்கிறது.
 • இதனால் சர்க்கரை நோயாளிகள் குதிரைவாலி அரிசியில் செய்யப்பட்ட உணவினை எடுத்து கொள்வது நல்லது
 • இதன் மூலம் சர்க்கரை அளவு எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்கும்.இதை சாதமாகவோ அல்லது கஞ்சியாகவோ எடுத்துக்கொள்ளலாம்.

சிறுநீர் பிரச்சனை நீங்க:

 • சிறுநீர் கழிப்பதில் நிறைய பேருக்கு பிரச்சனை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குதிரைவாலி அரிசியை பயன்படுத்துவது நல்லது.
 • இதன் மூலம் சிறுநீர் பிரச்சனை குணமாகும். குறிப்பாக சிறுநீரை அதிகமாக பெருக்கும் சக்தி உள்ளது
 •  இதனால் உடலில் கெட்ட நீர் வெளியேறிவிடும். தேவையற்ற உப்புகளை கரைக்கும்.
 •  உடலில் இருக்கும் நச்சை நீக்கி தூய்மையாக வைக்க உதவுகிறது.

பல் வலி குணமாக:

 • குதிரைவாலி அரிசியில் உள்ள பாஸ்பரஸ் உடலுக்கு மிகவும் அவசியமான சத்தாகும்
 • இது சுண்ணாம்பு சத்தோடு சேர்ந்து எலும்பு, பல் வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது
 • செல் வளர்சிதை மாற்றத்திலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பல், மற்றும் எலும்புகளுக்கும் நல்லது.

கண் வலி குணமாக:

 • குதிரைவாலி அரிசியில் பீட்டா கரோட்டின் இருப்பதால் கண் வலி சம்பந்தமாக எந்த நோய்களும் வராது
 • கண் புரைகள் கண் கோளாறுகள் போன்றவற்றில் இருந்து தடுக்கிறது.

கர்ப்பிணிகளுக்கும் நல்லது-kuthiraivali rice benefits in tamil

 • கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் அவ்வப்போது குதிரைவாலி அரிசியை எடுத்துக்கொள்ளலாம்.
 • உடலுக்கு வேண்டிய ஆற்றலை தருகிறது.
 • குதிரைவாலி அரிசி சாப்பிடுவோர் அதிகம் போலிஷ் செய்த அரிசியை வாங்க கூடாது.
 • அதன் சத்துக்கள் நிறைவாக இருக்கக்கூடிய குறைந்த அளவே போலிஷ் செய்த அரிசியை வாங்க வேண்டும்.

இரத்த கொலஸ்ட்ரால் அளவை குறைக்க:

 •   குதிரைவாலி அரிசியில் கார்போஹைட்ரெட் மற்றும் கொழுப்பு குறைவாகவே உள்ளன.
 •   100 கிராம் குதிரைவாலி அரிசியில் வெறும் 3.6 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது
 •  இதனால் அன்றாட வாழ்வில் குதிரைவாலி அரிசி உண்பதால் கொலஸ்ட்ராலை குறைத்து   உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.
 •  அது மட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்கவும் வளர்ச்சிதை மாற்றத்திற்கும்   உதவுகிறது kuthiraivali rice benefits in tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *