தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அந்தப் படத்தின் ஹீரோ நாக சைதன்யாவை காதலித்து பிறகு திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது திருமண வாழ்க்கை சில வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக சமந்தாவின் கரியர் அதள பாதாளத்திற்கு சென்றுவிடும் என பலரும் கூறினார்கள். ஆனால் அவர்களது ஆரூடத்தை அடித்து நொறுக்கும் விதமாக திருமண முறிவுக்கு பிறகு சமந்தாவின் கிராஃப் உச்சம் சென்றது.
புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம், தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் ஹீரோயின் அது தவிர ஹாலிவுட் படத்தில் கமிட்டானது படு பிஸியாக இருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு மையோசிடிஸ் எனும் தோல் நோய் வந்தது. அதனையடுத்து தீவிர சிகிச்சை எடுத்து அதிலிருந்து ஓரளவு மீண்டார் சமந்தா. நோயிலிருந்து மீண்டு சாகுந்தலம், குஷி, சிட்டாடல் வெப் சீரிஸ் ஆகியவைகளில் கமிட் ஆனார். இதில் சாகுந்தலம் படம் படுதோல்வியை சந்தித்தது. மொத்தமே 10 கோடி ரூபாய்தான் வசூலித்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாக சமந்தா ஒரு மெகா ஹிட்டை கொடுக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தார்.
இதற்கிடையே அவர் சினிமாவிலிருந்து சில காலம் ஓய்வு எடுப்பதாக கூறி வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்தார். இப்படிப்பட்ட சூழலில் குஷி படம் கடந்த ஒன்றாம் தேதி வெளியானது. விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்க ஷிவ் நிர்வாணா படத்தை இயக்கியிருந்தார். சாகுந்தலம் கொடுத்த அடி இதிலாவது மறையுமா என்ற எதிர்பார்ப்பு சமந்தாவின் ரசிகர்களிடையே எழுந்தது. இந்நிலையில் குஷி படத்திற்கு ரசிகர்கள் நல்ல ரெஸ்பான்ஸை கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக சமந்தாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருப்பதாகவும் படம் பார்த்த ரசிகர்கள் கூறினர். இப்படி விமர்சன ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்ற குஷி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டிருக்கிறது.

படம் வெளியாகி 3 நாட்கள் நிறைவாகியிருக்கும் சூழல் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு கம்பெனி அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை உலக அளவில் 70 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது குஷி. இந்த அறிவிப்பு சமந்தாவையும், அவரது ரசிகர்களையும் உற்சாகத்தின் உச்சத்தில் வைத்திருக்கிறது.