கீரை வகைகள் அதன் மருத்துவம் | Types of spinach And Benefits In Tamil

keerai vagaigal and benefits in tamil –கீரை மருத்துவம் 

keerai vagaigal and benefits in tamil உடல் நலத்தைக் காப்பது எப்படி? நமது முன்னோர்கள் உடல் நலத்தோடு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதை மனதில் கொண்டு பல ஆயிரம் வருடங்களில் ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு பருவக் காலங்களுக்கு ஏற்ப உணவு முறைகளை வகுத்துள்ளனர்.

உடலில் நோய் பற்றுவதற்கு மூலக் காரணங்களாக அமைவது உணவு முறைகள்தான். தன் உடல் நிலைக்கேற்ற உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்டு வந்தால் எக்காலத்திலும் நோய் பற்றாது, ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.

தினசரி நாம் உண்ணும் உணவில் வாதம் – பித்தம் – கபம் – தாதுக்களை ஈடுசெய்வதற்கு ஏற்ப உணவுப்பொருட்கள் அமைந்துள்ளன. ஆகையினால் உடலுக்கு ஏற்காததை விலக்கிவிட்டு எற்பதை மட்டும் உண்டால் நோய் உடலைப் பிடிக்காது.

தவிர சத்துள்ள உணவு வகைகளையும் உண்ணவேண்டும். இதனால் உடல் திடமாக இருக்கும். நாம் உண்ணும் உணவில் பலவிதமான சத்துக்கள் அடங்கி இருந்தாலும், குறிப்பாகத் தேவைப்படுவது ஆறுவகையான சத்துக்களாகும்.

  • புரதச் சத்து,
  • மாவுச் சத்து,
  • கொழுப்புச் சத்து,
  • உலோகச் சத்து,
  • நீர்,
  • வைட்டமின்

எனப்படும் உயிர்ச்சத்து என ஆறு வகையாக சத்துக்களை வகைப் படுத்தியுள்ளனர். இந்த சத்துக்கள் அடங்கிய உணவை சீரான அளவில் உண்ணாமையினால் உடல் பலவீனமடைந்து தனது செயல் திறனை இழந்து நோய்க்கு ஆளாகிவிடுகிறது.

இதன் காரணமாக நீரிழிவு, காசநோய், சுவாசகாசம், இருதய நோய், நரம்புத்தளர்ச்சி, மூட்டுவலி போன்ற பல நோய்கள் உண்டாகின்றன. இந்நோய்களைப் போக்குவதற்கும். உடலில் குறைந்துள்ள சத்துக்களைத் திரும்பப் பெறுவதற்கும் பெரும் பொருள் செலவு செய்கின்றனர்.

இழந்த சக்தியைப் பெற வைட்டமின் மாத்திரைகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் சாப்பிட்டால் அது புற்று நோய்க்கு வழி வகுக்கிறது என்று மருத்துவ இயலார் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

ஆகையினால் மருந்து மாத்திரைகளை விட இயற்கையாவே காய் – கனி – கீரைகளில் வைட்டமின் சத்துக்கள் உள்ளமையால் உணவில் இதனைப் பயன்படுத்தி அதன் மூலம் பலன்களைப் பெறலாம்

அகத்திக் கீரை, முருங்கை கீரை – மாலைக் கண் நோயைக் குணமாக்கும் கைகண்ட மருந்தாகும். பற்களின் ஈறுகளில் இரத்தம் கசிவதை நிறுத்துவதற்கு எலுமிச்சம் பழம், நெல்லிக்காய் சித்த மருத்துவத்தில் சிறப்புப் பெற்றவையாகும்.

நோய்கள் நீக்கும் கீரைகள் – keerai vagaigal and benefits in tamil

கீரையை நம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதின் மூலம் உடல் நலத்தைப் பலவகைகளில் பேணிப் பாதுகாக்கலாம். ஆகையினால் அன்றாடம் பகல் உணவின்போது ஏதாவது ஒரு கீரையைப் பயன்படுத்திக் கொண்டால் ஆரோக்கியத்துடன் வாழலாம்.

கீரையை கூடியமட்டும் அதிகமாக வேகவைக்காமல் முக்கால் வேக்காட்டிலேயே எடுத்துக் கீரையைக் கடைந்து வெங்காயம், மிளகாய் சேர்த்துத் தாளித்து உண்ணபது நலம்.

கீரைகள் செய்முறை – keerai vagaigal and benefits in tamil 

கீரையைச் சமைக்கும் போது முதலில் புல் பூண்டு இல்லாமல் சுத்தமாக்கிக் கொண்டு, பின்னர் கழுவி நறுக்கிச் சமைக்க வேண்டும். நறுக்கிய பின்னர் கீரையைக் கழுவினால் அதிலுள்ள சில உயிர்ச்சத்துகள் தண்ணீரோடு போய்விடும்.

இதைக் கவத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். கீரைகளைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அன்றைய தினம் பறிக்கப்பட்டக் கீரையாகப் பார்த்து வாங்கி சமைக்க வேண்டும். இன்று வாங்கி நாளைக்குக் கீரையைப் பயன்படுத்துவது முழுப் பயன்தராது.

கீரையிலுள்ள சத்துகளை முழுமையாகப் பெறவேண்டுமானால் அது வாடுவதற்குள் சமைத்துவிட வேண்டும். உணவுத் தயாரிப்புகள் கீரைகளை நீராவியில் இட்லி பானையில் வேகவைத்து உபயோகிப்பது சிறந்ததாகும்.

இரண்டாவதாகப் போதுமான நீரில் பாத்திரத்தில் கீரை ஒட்டாதபடி வேகவைத்துச் சமைப்பது நல்லதாகும். இவற்றைத் தவிர மற்ற பக்குவங்களான கறி, துவட்டல், பிரட்டல், வறுத்தல் போன்ற பக்குவங்களும் கூடாதவைகள் என்று முன்பே கூறப்பட்டிருக்கிறது.

கீரைகளை நன்றாக வேகவைக்காமல், முக்கால் வேக்காட்டுப் பதத்தில் எடுத்துக் கொள்வதே நல்லதாகும். இதைப் பாதுகாப்பாகச் சமைக்கப் படுவதாகும் என்று கூறுவர். அனைத்து உலக உணவாராய்ச்சி நிபுணர்களும் பச்சை உணவையே சிறப்பித்துக் கூறுகின்றனர்.

பச்சையாக உண்ணத்தக்க இலைகள்: கொடிப்பசலை இனங்கள், குத்துப் பசலைக் கீரை, பருப்புக் கீரை இனங்கள், தரைபிட்சலை இனங்கள், புல்வழுக்கை, கொத்துமல்லித் தழை, புதினாக் கீரை, கானாம் வாழைக் கீரை, கிளுவை, செப்பருத்தி இலை, சர்க்கரை வள்ளிக் கீரை இவைகள் பச்சையாக உண்ணத் தகுந்ததாகும். இவற்றுடன் சிறிது தேங்காய் துருவலும் தக்காளிப் பழமும் சேர்த்து சாலட்டு  (Salad) செய்து சாப்பிடலாம்.

கீரை வகைகளும் அதன் பயன்களும்– keerai vagaigal and benefits in tamil

 

கீரைகள்  பயன்கள் 
1.அகத்திக்கீரை அகத்திக்கீரையை வாரத்திற்கு இரண்டு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட உடல் உஷ்ணம் குறையும் , சீறுநீர் தடையின்றி போகும் , கண்கள் குளிர்ச்சி பெறும்.
2.அரைக் கீரை ஆண்மை குறைவு உள்ளவர்கள் அரைக்கீரையை தினசரி சாப்பிட இழந்த ஆண்மையை பெற முடியும்.
3.முருங்கை கீரை ஆண்மை விருத்திக்கு இந்த கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் விருத்தியாகும். இரும்பு சத்து அதிகம் காணப்படுவதால் நோய்யெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
4.முளைக்கீரை அஜீரணம் , மலச்சிக்கல் , குடல்புண் உள்ளவர்கள் முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் குணமாகும். நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கும் பலன் தரும்.
5.சிறு கீரை சீறுநீரகத்தில் உண்டாகும் நோய்களை குணமாக்குவதில் சிறுகீரை முக்கியத்துவம் பெறுகிறது.நோயால் பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிடுபவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது , ஏனெனில் வீரிய மிக்க மருந்துகளையும் தன்மையை முறித்துவிடும்.
6.மணத்தக்காளி கீரை வாய்ப்புண் , குடற்புண் குணமாகும் , மூல சூட்டையும் தணிக்கும், ஆசன கடுப்பு , நீர் கடுப்பு முதலிய நோய்கள் நீங்கும்.
7.பொன்னாங்கண்ணிக்கீரை வைட்டமின் A சத்து , புரதம் , இரும்பு சத்து அதிகம் காணப்படுவதால் நொய்யெதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படுகிறது. கண்ணனுக்கு ரொம்ப நல்லது.
8.கரிசலாங்கண்ணிக் கீரை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த கீரையை கரைத்து வெறும்வயிற்றில் குடித்துவர 15 நாட்களில் காமாலை நோய் அகன்றுவிடும்.
9.பசலைக்கீரை கர்பிணி பெண்களுக்கு இது ஒரு வடபிரசாதம் , கருத்தரித்த நேரத்தில் உடல் உஷ்ண பிரச்சினைகள் இது ஒருதீர்வாகும.
10.பருப்பு கீரை சரும நோய்களுக்கு இது ஒரு அருமருந்தாகிறது, சீதள உடம்பு வாகு உள்ளவர்கள் இதை ஒருஅளவுக்குத்தான் சாப்பிடவேண்டும்.
11.தூதுவளைக்கீரை இந்த கீரையின் சாற்றை தேன் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா ,ஈனினோ போன்ற நோய்கள் நீங்கிவிடும். தீராத இருமல் காய்ச்சல் குணமாகும்.
12.கலவைக் கீரை அடிக்கடி சாப்பிடுவதால் மூளைக்கு பலம் தரும் , இருதயத்துக்கு வலிமை சேர்க்கும். வாத நோய் நீங்கும்.
13.கீரைத்தண்டு வெள்ளை நிறமுடைய கீரைத்தண்டை சாப்பிட்டு வர மூலசூட்டை தடுக்கும் , நீர்க்கடுப்பு அகலும்.
14.ஆரைக்கீரை சர்க்கரை நோயாளிகளின் நண்பன் என்று சொல்லலாம், ஏனெனில் இந்த கீரையை காயவைத்து பொடி செய்து  அதை இரண்டு மண்டலம் சாப்பிட்டுவர சர்க்கரை நோய் முற்றிலும் அகலும்.
15.லெட்சுக்கீரை சீறுநீரக கோளாறுகளை சரிசெய்து , ஆண்மை விருத்தியடைய செய்யும்.
16.புளிச்சக்கீரை காச நோயை குணமாக்க வல்லது சருமநோய்களுக்கு ஒரு தீர்வை தருகிறது.பலவீனமானவர்கள் சாப்பிடுவதன் மூலம் உடல் வலிமை பெறும்.
17.புதினா கீரை இரத்தத்தை சுத்தமாக்கி உடலுக்கு புத்துணர்வை தரும்.வாந்தி , உடல்சூடு குறைக்க வல்லது.
18.பிண்ணாக்கு கீரை மலச்சிக்கல், சீறுநீரகம் போன்ற கோளாறுகளை சரிசெய்யும். அடிக்கடி சாப்பிடுவதால் சரும ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.
19.வெந்தய கீரை மாதவிடாய் கோளாறுகள் , காசநோய் ,கண்பார்வை கோளாறுகள் , மூலநோய் போன்ற நோய்களுக்கு இது ஒரு தீர்வாக அமைகிறது.
20.பண்ணைக்கீரை குடல் வலிமை இல்லாதவர்களும் , குடல் இரணம் உள்ளவர்களும் இதனை சாப்பிடுவது வடபிரசாதமாகும்.
21.சக்கரவர்த்திக்கீரை வயிறு சம்பந்தமான கோளாறுகள் , சீறுநீர் தொற்று சரிசெய்ய வல்லது.தாது விருத்திக்கு ஏற்றது.
22.சுக்காங்கீரை மூலநோய் , இதய நோய் , பாம்பு கடி ,தேள்கடி ,மூச்சு திணறல் , விஷக்கடி , பூச்சிக்கடி போன்ற நோய்களுக்கு தீர்வை தருகிறது.
23.முள்ளுக்கீரை நீர் அடைப்பு , பாம்பு கடி ,வயிற்று வலி போன்ற பிரச்சினைக்கு தீர்வை கொடுக்கிறது. இதன் வேருடன் ஓமம் , பூண்டு சேர்த்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.
24.மஞ்சள் கரிசிலாங்கண்ணி கீரை காமாலை நோய் குணமாகும்,இளைப்பு னாய் சரியாகும். தலைமுடி பராமரிப்பிற்கு உதவுகிறது
25.தவசிக்கீரை சத்து நிறைந்த கீரைகளில் முதலிடமாக விளங்குகிறது.எலும்பு மற்றும் மூளை வளர்ச்சிக்கும் இக்கீரை உதவுகிறது. இது மல்டி வைட்டமின் கீரை எனப்படுகிறது.
26.துத்திக்கீரை ஆசனக்கடுப்பு ,மேகநோய் போன்றவற்றிற்கு நல்ல பயன் அளிக்கிறது.எலும்பு முறிவு உள்ள இடத்தில் இந்த இலையை அரைத்து பூச முறிந்த பகுதி சரியாகிறது.
27.மூக்கிரட்டை கீரை இரத்த விருத்திக்கும் , ஆண்மை விருத்திக்கும் இந்த கீரை உகந்தது.
28.முள்ளங்கி கீரை புரத சத்து அதிகமாக காணப்படுவதால் இக்குறைபாடு உள்ளவர்கள் இந்த கீரையை சாப்பிடலாம்.
29.முடக்கத்தான் கீரை நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைக்கும் நல்ல தீர்வை கொடுக்கிறது.தசை வலிகளுக்கும் பயன் அளிக்கிறது.
30.கோவைக்கீரை சொறி சிரங்கு , தேகசூடு , நீரடைப்பு முதலிய நோய்கள் சரியாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *