கருப்பட்டியின் நன்மைகள் | Karupatti Benefits In Tamil

karupatti benefits in tamil  அக்காலத்தில் நம் முன்னோர்கள் எல்லாம் வகை உணவுகளுக்கும் கருப்பட்டியை தான் பயன்படுத்தி வந்திருக்காங்க.

அப்படி பயன்படுத்தியதால் அந்த காலத்தில் எந்த விதமான நோயோ , உடல் சம்பந்தப்பட்ட வியாதிகளோ ஏற்பட்டது இல்லை. ஆனால் இந்த காலத்தில் சர்க்கரை என்ற நோய் இந்த உலகத்தை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது.

அதற்கு காரணம் இப்பொழுது நாம் பயன்படுத்துகிற வெள்ளை சர்க்கரை ஒரு காரணமே!. அதுபோக இப்பொழுது நமது உணவு பழக்கவழக்கங்கள் கூட ஒரு காரணம் தான்.

இந்த வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாம் கருப்பட்டியை பயன்படுத்திவந்தாலே நமது பாதி நோய்களுக்கு தீர்வு காணலாம்.தேவை இல்லாத மருத்துவ செலவுகளையும் குறைக்கலாம். அதுபோக கருப்பட்டி ஒரு உணவு பொருளாக மட்டுமில்லாமல் மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நமக்கு எந்த அளவுக்கு வெள்ளை சர்க்கரை தீங்கு அளிக்கிறதோ அந்த அளவுக்கு நன்மையை தரக்கூடியது கருப்பட்டி.  அதோட எக்கசக்க நன்மைகளையும் , மருத்துவ குணங்களையும்  உடையது.

கருப்பட்டி என்றால் என்ன – karupatti benefits in tamil 

கருப்பட்டியின் நன்மைகள் karupatti benefits in tamil கருப்பட்டி லேகியம் கருப்பட்டியின் அற்புத குணங்கள்

கருப்பட்டி என்பது பனை மரத்திலிருந்து கிடைக்கூடிய பதநீரை நன்கு காய்ச்சி கிடைக்கக்கூடிய ஒரு வகை பொருளாகும். பெரும்பாலும் இவை நமது தமிழ்நாட்டில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

தை , மாசி , பங்குனி , சித்திரை மாதங்களில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. பங்குனி சித்திரைமாதங்களில் பதப்படுத்த பனைமரம் நீரை எடுத்து இரும்பு கடாயில் சுமார் இரண்டு மணி நேரம் காய்ச்சி ,

அது ஓரளவுக்கு பதம் வந்த பின்னர் அச்சுகளில் ஊற்றி உற்பத்தி செய்யப்படுகிறது.இதில் இருந்து கிடைக்கக்கூடிய ஒன்றே கருப்பட்டி என்கிறோம்.

ஒரிஜினல் கருப்பட்டியை கண்டறிவது எப்படி – karupatti benefits in tamil 

நல்ல தரமான கருப்பட்டி என்றால் நீரில் போட்டவுடன் கரையாது, அவை கரைவதற்கு சுமார் ஒருமணி நேரமாவது ஆகும், ஆனால் போலி கருப்பட்டியானது நீரில் போட்டதுமே விரைவில் கரைந்துவிடும்,

ஏனெனில் கருப்பட்டி உற்பத்தி குறைவு என்பதால் தேவைக்காக சில கலப்படம் பொருட்களை சேர்த்து செய்யப்படுவதால் அவை ஒரிஜினல் கருப்பட்டியின் தன்மையை இழக்கிறது.

மேலும் கருப்பட்டியை நாக்கில் வைத்ததுமே அதன் இனிப்பு சுவை பதப்படுத்தப்பட்ட நீரின் தன்மையை காட்டும் ஆனால் போலி கருப்பட்டி அதிக இனிப்பு சுவையை காட்டும். மாவாக இருப்பது நல்ல கருப்பட்டி ஆகும்.

கருப்பட்டியின் அற்புத குணங்கள் – karupatti benefits in tamil 

 • கருப்பட்டியில் அதிக அளவுக்கு இரும்பு சத்தும், கால்சியமும் உள்ளது, இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 •  வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் அதிக அளவு காணப்படுவதால் இது நீரழிவு நோயை கட்படுத்துகிறது.
 • பெண்களுக்கு அதிக அளவுக்கு நன்மையை தரக்கூடிய மகத்துவமான ஒரு பொருளாகும்.
 • பருவம் அடைந்த பெண்களுக்கு,கர்ப்பிணி பெண்களுக்கும் அந்த காலத்தில் கருப்பட்டியை அதிக அளவுக்கு கொடுப்பது வழக்கம், ஏனெனில் இதில் அதிக அளவு நார்ச்சத்தும் காணப்படுகிறது.மேலும் உடலை ஒரு கட்டுக்கோப்புடனும் வைக்க உதவுகிறது.
 •  கருப்பட்டி இரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு வலுவை கொடுக்கிறது.
 • இதனால் உடலுக்கு புதிய பொலிவை கொடுத்து மேனியை பளபளக்க வைக்கிறது.
 • கருப்பட்டியில் சுண்ணாம்பு சத்து காணப்படுவதால் உடலில் இரத்தத்தை சுத்திகரித்து உடம்பினை வலுவடைய செய்கிறது
 • சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு அற்புத மருந்தாக செயல்பட்டு அவர்களின் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கிறது.
 • கைக்குத்தல் அரிசியுடன் அவர்கள் கருப்பட்டியை சேர்த்து சாப்பிட்டு வர அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினையை சரிசெய்து உடம்பில் இன்சுலினை சுரக்கச்செய்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது.
 • குழந்தைகளுக்கு பாலுடன் சர்க்கரையை சேர்க்காமல் கருப்பட்டியை சேர்த்து கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொடுக்கிறது.
 • பெண்களின் வெள்ளைப்படுதலை நிறுத்தி அவர்களுக்கு இரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது.
 • பருவம் அடைந்த பெண்களுக்கும் , பாலுட்டும் தாய்மார்களுக்கும் கருப்பட்டி உளுந்து சேர்த்து களி செய்து கொடுப்பதனால் இடுப்பு எலும்பு வலுபெறும்.
 • சாப்பிட்ட பின்பு உணவு செரிமானத்துக்கு கருப்பட்டி நல்ல பயனை அளிக்கிறது.

கருப்பட்டி தீமைகள் -karupatti benefits in tamil

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது நாம் அறிந்ததே , அதுபோல அதிக அளவு நாம் ஒப்புறு உணவை எடுத்துக்கொள்ளும்போது அவை தேவையில்லாத ஒவ்வாமையை நம் உடலுக்கு ஏற்படுத்துகிறது.

கருப்பட்டி லேகியம்

இது நம் கிராம புறங்களில் பிள்ளைபெற்றெடுத்த தாய்மார்களுக்கு கொடுக்கக்கூடிய ஒருவகை கைமருந்தாகும் , இதனை அவர்கள் சாப்பிடுவதால் மீண்டும் பழைய வலுவை பெறுகிறார்கள்.அவை செய்வதற்கு தேவையானது ,

 • ஓமம் 50கி 
 • சுக்கு  50கி
 • தேன்  1/2லி 
 • கருப்பட்டி 1/2கி 
 • பால் 200மிலி 

ஓமம் , சுக்கு ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து நீரில் ஊறவைத்து பின்பு அவற்றை நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும், கருப்பட்டியை பாகு மாதிரி காய்த்து அதனுடன் அரைத்த இந்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்,

பின்பு அவை வெந்ததும் அதனுடன் பாலும் தேனும் சேர்த்து மீண்டும் கிளறவும்.இதனை குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு கொடுப்பதன் மூலம் ஒரு பெண் அவள் இழந்த சக்தியை மீண்டும் பெறுகிறாள்.

மேலும் உடலும் கட்டுக்கோப்பாக இருக்கும். இடுப்பு வலி , குறுக்கு வலி போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *